முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவர் : சீனாவில் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
China 2022 05 03

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் முதன்முறையாக சீன நாட்டில் கொரோனா பாதிப்பு 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டு பின்னர் பல நாடுகளுக்கு பரவ தொடங்கியது.  இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  சீனா, தற்போது கொரோனா தொற்று பரவலால் தத்தளிக்கிறது.  தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது. 

இந்த நிலையில், ஷாங்காய் நகரில் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தவறுதலாக கூறப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவரை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து சென்றனர். ஆனால், அவர் உயிருடன் இருந்துள்ளார்.  அவரது உடல் பாகங்கள் அசைந்துள்ளன. 

இதனால், பரிசோதனை கூடத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதன் பின்னர் அவரது உடல்நலம் சீரடைந்தது. இதனை உள்ளூர் அரசு நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. 

இந்த சம்பவம் பற்றி அறிந்த ஷாங்காய் நகரவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  இது பற்றி அரசும் விசாரணை நடத்த கூட்டு குழு ஒன்றை அமைத்து உள்ளது.  இந்த சம்பவத்தில், 5 மாவட்ட அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவமனையின் தலைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து