முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை நிறுத்த ரஷ்யாவுடன் உள்ள செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் : டென்மார்க் பிரதமர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
Denmark 2022 05 03

Source: provided

கொபென்ஹஜென் : உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவிடமுள்ள தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என நம்புகிறோம் என்று டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல்நாளான நேற்று முன்தினம் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி 2-வது நாள் பயணமாக நேற்று டென்மார்க் சென்றார். அங்கு இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் பேசியதாவது, நாங்கள் இரு ஜனநாயக நாடுகள். சர்வதேச விதிகளை நாங்கள் நம்புகிறோம். இந்த சூழ்நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். நெருங்கிய கூட்டணியினர் என்ற முறையில் நாங்கள் உக்ரைன் போர் குறித்து ஆலோசித்தோம்.

உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடூரமான குற்றங்கள் மற்றும் தீவிரமான மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இந்த கொலைகளை கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து தன்னிச்சையான விசாரணை நடத்த நாங்கள் வலியுறுத்துகிறோம்.

டென்மார்க் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் சட்டவிரோதமான தூண்டுதலற்ற போரை கண்டிக்கிறோம். செய்தி மிகவும் தெளிவாக தெரிவிக்கபபடுகிறது. புதின் (ரஷ்ய அதிபர்) இந்த போரை உடனடியாக நிறுத்தி கொலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ரஷ்யாவுடன் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்தியா இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ஈடுபடவேண்டும் என் நான் நம்புகிறேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து