முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரை பயன்படுத்த வணிக நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்: எலன் மாஸ்க்

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Elon-Muskie  2022 04 26

Source: provided

வாஷிங்டன் : சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளார் எலன் மாஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழித்து விடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி டுவிட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார். 

இதுகுறித்து எலன் மாஸ்க் கூறுகையில்,  சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் ஆண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன். பலதரப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய அமைப்பை தான் டுவிட்டரில் நான் நிறுவ உள்ளேன்.

அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக டுவிட்டர் இருக்கும். சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து