முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட மோடியின் புகைப்படம் : வலைதளங்களில் வைரல்

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Modi 2022 05 04

Source: provided

பெர்லின் : 30 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த  புகைப்படம் 1993-ம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்த போது எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து