முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் நடக்கிறது : நடிகை நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

சனிக்கிழமை, 7 மே 2022      சினிமா
Nayantara-Vignesh 2022 05 0

Source: provided

சென்னை : இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 

சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நேற்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து