முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் தொடர்பில்லை: கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் : டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

Source: provided

சென்னை : கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இதனால் இதற்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து