முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      தமிழகம்
Kodaikanal 2022 05 07

Source: provided

கொடைக்கானல் : கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சீரான சுற்றுலா பயணிகள் வரத்து இருக்கிறது.

வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக, கொடைக்கானலில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலாத்தலங்களான தூண் பாறை, குணாகுகை, மன்னவனூர் ஏரி, பிராயண்ட் பூங்கா மற்றும் ஏரியில் படகு சவாரி இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் கொடைக்கானலில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து