முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாயத்திற்காக மயிலாப்பூர் தம்பதி கொலை: 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தது தமிழக காவல்துறை : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 06

Source: provided

சென்னை : ஆதாயத்திற்காக மயிலாப்பூர் தம்பதி கொலை செய்யப்பட்டதாகவும், 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தது தமிழக காவல்துறை என்று சட்டசபையில் விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் இரட்டை கொலை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் நேற்று முதல்வர் பதில் அளித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், 7ம் தேதி மயிலாப்பூர் இரட்டைக் கொலை தொடர்பாக புகார் பெறப்பட்டதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சென்னை காவல்துறையினர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய ஓட்டுனர் கிருஷ்ணா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை கைது செய்துள்ளது. பின்னர், இரட்டை கொலையில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். 

ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா கொலை ஆதாயத்துக்காக நடந்த கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மயிலாப்பூர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரையும் கழுத்து, தலை பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து அவரது கார் ஓட்டுனர் கிருஷ்ணா கொலை செய்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து