முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன : காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சட்டசபையில், காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை, மீட்புப்பணிகள் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, காவல்துறை சார்பில் கொள்கை விளக்க குறிப்பு வழங்கப்பட்டது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு.,

*2021-ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 442 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. வரதட்சணை மரணம் தொடர்பாக 27 வழக்குகளும், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் பெண்களுக்கு கொடுமை என்று 875 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

*மானபங்கம் செய்ததாக 1,077 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தமாக 4 ஆயிரத்து 469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

*டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் கைபேசிகளின் பரவலான பயன்பாடு போன்றவை இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்க காரணமாக உள்ளது. 2011ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ம் ஆண்டு 13,077 ஆக அதிகரித்துள்ளது.

*மாநிலத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன; கண்காணிப்பு பணி - 71 மற்றும் வெடி மருந்து மற்றும் போதைப் பொருட்கள் - 99  மோப்ப நாய்கள், தாக்குதல் பணி - 2 மற்றும் இதர பணி - 4 மோப்ப நாய்கள் உள்ளன.

*காவல்துறையினர் பொதுமக்களை நட்புடன் நடத்துவதை உறுதி செய்ய விரைவில் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

*ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, புதுடெல்லியில் இந்திய தொல்லியல் துறையினர் வசம் உள்ள சிலைகள் விரைவில் தமிழ்நாடு வந்தடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து