எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த மாதம் லண்டன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைவதால் அதன்பிறகு முதல்வரின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். அதன் பிறகு அங்கு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து அபுதாபி சென்றார். அபுதாபி பயணம் மூலமும் ஏராளமான தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தனர். துபாய்அபுதாபி பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.2,600 கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டது. இதன் மூலம் 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது பராபி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகம்மது அல் வாதேயுடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் உள்ள 4 பெரும் துறைமுகங்களில் சாலைகள் மற்றும் ரெயில் இணைப்புகள் பற்றியும், திறன்மிகு பணியாளர்கள் மேம்பட்ட வணிக சூழல் போன்றவற்றை எடுத்துக் கூறி தமிழகத்தில் ஒரு ரசாயன வளாகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திடுமாறும் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய தொழில்கள் வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 1 ஆண்டு நிறைவு பெற்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால் இந்த ஆண்டிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதையொட்டி மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வர திட்டமிட்டுள்ளார். இதற்காக அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் (10ம் தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த மாதம் (ஜூன்) லண்டன் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பார் என்றும், அதன்பிறகு ஜூலை மாதம் அமெரிக்கா செல்லும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையொட்டி தொழில்துறை அதிகாரிகள் லண்டன், அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிகாரிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு செல்லும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்