முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மறுநாள் வெளியாகும் டான்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Sivakarthikeyan 2022

Source: provided

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் மே 13-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள டான் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையில் படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இதேபோன்று சமீபத்தில் வெளியிடப்பட்ட டான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு ‘யு’ சான்றிதழை கிடைத்துள்ளது. இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழகத்தில் டான் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ட்ரெய்லர் வெளியீட்டையொட்டி, நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டு டான் படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன், அனிருத் என 2 டான்கள் இருப்பதாக பாராட்டியிருந்தார். டான் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு இது முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து