முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெஞ்சுக்கு நீதி இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Uthayanidhi 2022

Source: provided

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி  கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த டிரைய்லர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அவங்க குடிக்கும்போது அழுக்காகாத தண்ணீர் நாங்க குடிச்சா மட்டும் அழுக்காகி விடுமா? சாக்கடையில் இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும் என்றால் அந்த சாக்கடையில் இறங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”. போன்ற வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதைதான் இந்த நெஞ்சுக்கு நீதி. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’ஆர்ட்டிகிள் 13’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து