முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசித்திரன் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Vicittiran-Review 2022

Source: provided

பத்மகுமார் இயக்கத்தில் RK சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள படம் விசித்திரன். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த விசித்திரன்.கதை, காவல் துறையில் பணியாற்றிவரும் RK சுரேஷ் பூர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.RK சுரேஷின் மகளும், மனைவியும் ஒரேமாதிரியான விபத்தில் இறந்து போகிறார்கள். இதனால் மனம் உடைந்த RK சுரேஷ் தனிமையில் வாழ்ந்து வருகிறார். பிறகு அது விபத்து அல்ல கொலை என தெரியவருகிறது. இறுதியில் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? அந்த கொலையாளி யார் என்பதுதான் படத்தின் கதை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ் ஒரு வித்தியாசமான நாயகன் வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.இயக்குனர் பத்மகுமார் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கேற்றாற் போல, திரைக்கதையை நகர்த்தி சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. பல மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு மோசமான செயலையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் பத்மகுமார். வெற்றி வேல் மாஹேந்திரன் ஒளிப்பதிவு அருமை. பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மர்யான், அனில் முரளி பாண்டி ரவி போன்றோர் தங்கள் நடிப்பு திறமையை வெளிபடுத்தியுள்ளனர். மனித உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவத்துறை மாஃபியா கையில் சிக்கி சின்னாபின்னாவதை மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் விசித்திரன் – எமோஷனல் த்ரில்லர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து