முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

வியாழக்கிழமை, 12 மே 2022      உலகம்
petrol-bulk-12-5-22

Source: provided

மாட்ரிட் : ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என கண்டனங்கள் எழுந்தன. இதனால் 350-க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து