முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயுள்ளத்தோடு நோயாளிகளை காக்கும் செவிலியர்களின் பணியை மதிப்போம் முதல்வர் மு.க. ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் மே 12-ம் தேதியன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் இந்த தேவதைகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராகக் கருதப்படும் புளோரென்ஸ் நைட்டிங்கேளின் பிறந்தநாள் அன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் கதாநாயகர்களாக செயல்பட்ட மருத்துவர்களைப் போலவே இன்றியமையாத சேவைகளை செய்தவர்கள் இந்த செவிலியர்கள் ஆவர். கொரோனா பெருந்தொற்றை மானுட குலம் எதிர்கொள்வதில் செவிலியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூருவதற்கு இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்.  தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம்.  அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும் என்று அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து