முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச செவிலியர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
TTV 2022 03 10

Source: provided

சென்னை : சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, 

தன்னலம் பாராது இரவு, பகலாக சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோயைக் குணப்படுத்துவதிலும் நெருக்கடியான நேரங்களில் உயிரைக் காப்பதிலும் செவிலியர்களின் பங்கு மகத்தானது. தாயன்போடு செவிலியர்கள் செய்திடும் சேவை போற்றி மதிக்கத் தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த செவிலியர்களின் வாழ்வியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை இந்த தினத்தில் யோசித்து பார்க்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. 

குறைந்த ஊதியம், அதிக வேலை என்று செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை நம் கண்ணெதிரே பார்க்கிறோம். அதிலும் தமிழகத்தில் அதிக அளவிலான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். செவிலியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை வாழ்த்துவதோடு விட்டுவிடாமல் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும். இதற்காக செவிலியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வென்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து