முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க வரும் 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஊட்டி பயணம்

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைக்க வரும் 19-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். 

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் இணைந்து செய்து வருகின்றன.  இது தவிர ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது . இதன் ஒரு பகுதியாக நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும், 200 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19-ம் தேதி மாலை ஊட்டி செல்கிறார்.

20-ம் தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் செடிகளை அவர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் முதல்வர் வரும் 21-ம் தேதி அரசு சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதே போன்று வரும் 15-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு செல்கிறார். வரும் 24-ம் தேதி வரை ஊட்டியில் தங்கும் கவர்னர் அன்றைய தினம் நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். இதனிடையே வரும் 15-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் குன்னூர் மற்றும் ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு செல்லவுள்ளார். துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து