முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: reuters

சென்னை : இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடியால் துயரப்படும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 123 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடா் மற்றும் மருந்துப் பொருள்கள் தமிழக அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதே போல, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் தனிக்கவனம் செலுத்தி, தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் உதவிகள் அனைத்தும் தமிழா்களுக்கே சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைத்து, அக் குழு மூலமாக உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. 

இந்நிலையில், இலங்கைக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அந்த குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா லாசரஸ், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர், ஆவின் மோலண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருள்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இந்த மாதம் இறுதிக்குள் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள்   தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து