முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுதுதலே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான இந்த திட்டத்திற்கு தேவையான அதிகாரிகளை நியமிக்கும் பணி தொடங்கியது. தமிழக திறன் மேம்பாட்டு கழகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தலைமைச் செயல் அதிகாரி, துணைத் தலைவர்கள், உதவி துணைத் தலைவர், திட்ட மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து