முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி அனல் மின்நிலைய 4 அலகுகளில் உற்பத்தி நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
Thoothukudi 2022 05 13

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 அலகுகளில் உற்பத்தி நேற்று நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3-வது அலகு தவிர மற்ற நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி நேற்று வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, அனல் மின்நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து தொடா்ச்சியாக 5 அலகுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து