முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீபா காலமானார் : அமைச்சகங்கள் 3 நாட்களுக்கு மூடல்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
Sheik-Khalifa 2022 05 13

Source: provided

சவுதி : ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீபா பின் சையத் அலி நஹ்யான் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீபா பின் சையத் இருந்து வந்தார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக கருதப்பட்டார் ஷேக் கலீபா பின் சையத்  அல் நஹ்யான்.   

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள்கள் துக்கும் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாள்களுக்கு  மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து