முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பு ஏற்படும் வரும் 21-ம் தேதி நடைபெறும் நீட் மருத்துவ முதுநிலை தேர்விற்கு தடை விதிக்க முடியாது : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21-ம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும். முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோக்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022 நீட் தேர்வை தள்ளி வைக்ககோரிய உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பெரும்பாலானவர்கள் நீட் 2022 தேர்வு வேறு தேதிக்கு ஒத்தி வைக்க விரும்புகின்றனர். கடந்த 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே வரும் 21ம் தேதி நடைபெற உள்ள முதுதிலை நீட் 2022 தேர்வு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின் நீட் முதுநிலை தேர்வை வரும் 21-ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து