முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய விலகும் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பால் இலங்கையில் பதற்றம்..!

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
Gotabhaya 2022 04

இலங்கையில் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோரை சமாதானப்படுத்தவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைக்கப்படும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இரவு அறிவித்திருந்தார். 

இந்நிலையில், அதிபர் மாளிகையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக நேற்று முன்தினம் இரவு பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமராக தனது பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கிய ரணில் விக்ரமசிங்க, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்ட்டுள்ளார். ஆனால், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், போராட்டத்தை தொடரப் போவதாக கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து