முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணி குறித்து கிண்டல்: யுவராஜ் சிங்கிற்கு ரெய்னா பதிலடி

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      விளையாட்டு
Yuvraj-Singh 2022 05 13

Source: provided

மும்பை : சென்னை அணி குறித்து ரெய்னாவிடம் யுவராஜ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியேறியது...

ஐ.பி.எல் 15-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் போட்டி ஒன்றில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் நடப்பு சீசனில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணியுடன் சென்னை அணியும் தற்போது இணைந்துள்ளது.  

யுவ்ராஜ் கேள்வி...

இந்த நிலையில் சென்னை - மும்பை போட்டியின் போது உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் மற்றும் ரெய்னா ஆகியோர் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது யுவராஜ் சென்னை அணி குறித்து ரெய்னா-விடம் கிண்டல் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அருகில் இருக்கும் ரெய்னாவிடம் பேசும் யுவராஜ், "இன்றிரவு உங்கள் அணி 97 ரன்களுக்கு  ஆட்டமிழந்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார்.

அணியில் இல்லை...

அதற்கு பதில் அளித்த ரெய்னா, "நான் தான் போட்டியிலே இல்லையே" என அதிரடியாக பதில் அளித்தார். இவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து