முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய கோரி இலங்கை கோர்ட்டில் வழக்கு

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
rajapakjay-12-5-22

Source: provided

கொழும்பு : முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் கோரி இலங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது பணிகளை தொடங்கி உள்ளார். அவரது தலைமையிலான மந்திரி சபையில் இணைய எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன.   இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்துள்ளது.

இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ம் தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனாலும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் (வயது 73) பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.  இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற போதும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில், டெம்பிள் ட்ரீஸ் மற்றும் கலே பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி குற்றச்செயலில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய குற்றப்பிரிவு விசாரணை துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து