முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
Nahyan 2022-05-14

Source: provided

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அதிபர் மாளிகை அறிவித்தது.  அதிபரின் மறைவுக்கு,  நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு 30 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஷேக் கலிபா பின் ஷயத் அல் நயான் அதிபராக இருந்து வந்த‌து குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 61-வயதான  ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து