முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தீ விபத்து: எடப்பாடி இரங்கல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
EPS-2022-04-14

Source: provided

சென்னை : டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உடல் கருகி பலியாகினர். அத்துடன் 40-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் இந்த தீ விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமுற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது  டுவிட்டர் பக்கத்தில்,  நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி வணிகவளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து