முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1-9 வகுப்புகளுக்கான விடைத்தாளை திருத்தி வரும் 27-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான விடைத்தாளை திருத்தி வரும் 27-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தயாரிக்க வேண்டும்  என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவியருக்கு நேற்று முன்தினத்துடன் தேர்வுகள் முடிந்தது. இதையடுத்து, அவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தி, தேர்வு முடிவுகளை வரும் 27-ம் தேதி தயாராக வைத்திருக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 

சென்னை மாவட்டத்தில் 2021-2022 ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு  அதற்கான மதிப்பெண்கள் பதிவேட்டில் பதியப்பட்டு, தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளியின் தேர்வுக் குழுவால் வரும் 27-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், 28-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட தேர்ச்சிப் பதிவேடுகளை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள்  தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ள மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

சென்னையில் இயங்கும் பள்ளிகளில் தென் சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப்பள்ளி, பசுல்லா ரோடு, தி.நகர், மத்திய சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப் பள்ளி, சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழைய வண்ணாரப் பேட்டை பி.ஏ.கே பழனிச்சாமி  மேனிலைப் பள்ளி, வட சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரம்பூர் லூர்து மேனிலைப் பள்ளி, மேற்கு கல்விமாவட்டத்தை சேர்ந்தவர்கள் புரசைவாக்கம் கேரளா வித்யாலயா மேனிலைப் பள்ளியிலும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து