முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கலை மருத்துவ நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Neet 2022 03 12

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. இளங்கலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்தற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 6 ந் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ மாணவியா் இந்த தோ்விற்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து