முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏழு நாள் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
Ramnath 2022 05 15

Source: provided

புது டெல்லி : ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் உபரகரணங்கள் வழங்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று முதல் வரும் 21-ம் தேதி வரை 7 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகிய இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.  முதலில் ஜமைக்கா செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு சிறிய தீவுகளின் முன்னேற்றம் குறித்தும், கரீபியன் மக்களுடனான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து