முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்த பூர்ணிமா விழா: பிரதமர் மோடி இன்று நேபாளம் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
modi-2021-12-28

Source: provided

புது டெல்லி : புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று (16-ம் தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேச உள்ளார்.  

இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- 

நேபாளத்துடனான நமது நட்புறவு இணையற்றது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவை நெருங்கிய நட்புறவின் நீடித்த அம்சமாக அமைகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறேன். 

கடந்த மாதம் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் இந்தியப் பயணத்தின் போது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் மீண்டும் அவரை சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன்.

இந்த சந்திப்பின்போது பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து