முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை ரூ. 12 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
modi-1-2021-12-16

Source: provided

சென்னை : பிரதமர் மோடி வருகிற 26-ம் தேதி (வியாழன்) சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

சென்னையில் நடை பெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். 

விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்கின்றனர்.  பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்துக்கு செல்கிறார். 

இந்த விழாவில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவடைந்த பல்வேறு பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
  பெங்களூர் - சென்னை நான்கு வழி சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும்,  சென்னையில் புதியதாக அமைய உள்ள மல்டி மாடல் லாஜிஸ் டிக் பூங்காவுக்குவும்,  ஓசூர் - தருமபுரி இடையேயான 2 மற்றும் 3-ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும், மீன்சுருட்டி - சிதம்பரம் இடையே புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் மத்திய நகர்ப்புற வீட்டு வசதித் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறை சார்பில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொத்தம் ரூ. 12 ஆயிரத்து 413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.  விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து