முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

Source: provided

சென்னை : கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து நாளை 17-ம் தேதி அறிக்கை அனுப்பவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

கொரோனா காலத்தில், முறைகேடாக இபாஸ் பெற்ற பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற கொரோனா விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பரவலின் போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தடையை மீறி வெளியே வந்த பல லட்சம் பேர் மீது கொரோனா பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் செய்யப்பட்டது. வழக்குகள் பொது மக்களின் நலன் கருதி வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை, செயல்படுத்தி, வழக்குகளை வாபஸ் பெறும்டி, போலீசாருக்கு உள்துறை செயலர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு , மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 

முதல்வர் உத்தரவுப்படி கொரோனா காலத்தில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக 2019-20 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இபாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற கொரோனா  விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை நாளை 17-ம் தேதிக்குள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து