முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      விளையாட்டு
Ruduraj-Keikwat 2022 05 15

Source: provided

மும்பை : ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. 

நேற்று நடைபெற்றம் 62-வது லீக் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணியின் தொடக்க தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் 

குஜராத் அணியின் ஷமி வீசிய 2-வது  ஓவரில் கான்வே 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் 

பின்னர் வந்த மொயீன் அலி ருதுராஜுடன் இணைந்து நிலைத்து ஆடினார் .இருவரும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர் .மொயீன் அலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 44  பந்துகளில் அரைசதம் அடித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து