முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் அரங்கில் ஆயிரம் வெற்றிகள் - சரித்திரம் படைத்த நோவக் ஜோகோவிச்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      விளையாட்டு
Djokovic 2022 05 15

Source: provided

இத்தாலி : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்  நோவக் ஜோகோவிச் டென்னிஸ் உலகில் 1000-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்த சாதனையை படைக்கும் 5-வது வீரர் என்ற பெருமையை  ஜோகோவிச் பெற்றுள்ளார். இந்த சாதனை பட்டியலில் ஜிம்மி கானோர்ஸ் (1,274), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1,251), அமெரிக்காவின் இவான் லென்டில் (1,068) , ஸ்பெயினின் ரபேல் நடால் (1,051) ஆகியோர் முதல் 4 இடத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து