முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமை ஏற்றுமதிக்கு தடை : இந்தியா முடிவுக்கு சீனா ஆதரவு

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
Wheat 2022 05 16

Source: provided

பெய்ஜிங் : நாட்டில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதியை நிறுத்தி வைப்பது மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. இந்தாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது.

இந்திய அரசின் முடிவுக்கு ஜி 7 நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவின் முடிவால் உலகெங்கும் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலகளவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என ஜெர்மனி விவசாய அமைச்சர் கெம் ஆஸ்டெமிர் தெரிவித்தார். 

இந்தியாவுக்கு சீனா ஆதரவு

இந்த நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. சீன நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுக்கு ஆதரவாகவும் ஜி 7 நாடுகளை விமர்சித்தும் எழுதப்பட்டுள்ளது. குளோபல் டைம்ஸ்  நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், “ 

இந்தியாவை குற்றம் சாட்டுவது  உணவு பிரச்சினைக்கு தீர்வாகாது. கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது எனக்கூறும் ஜி 7 நாடுகளின் விவசாயத்துறை மந்திரிகள், உணவு சந்தை விநியோகத்தை நிலைப்படுத்தும் விதமாக தங்கள் நாட்டு கோதுமை ஏற்றுமதியை ஏன் அதிகரிக்கக்கூடாது?  உலகில் அதிக அளவில்  கோதுமை ஏற்றுமதி செய்யும் 2-வது நாடாக இந்தியா இருந்தாலும்,  சர்வதேச கோதுமை ஏற்றுமதி சந்தையில், இந்தியாவின் பங்கு சிறிய அளவே உள்ளது. 

முரண்பாடாக  சில வளர்ந்த பொருளாதார நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியே ஆகிய நாடுகள் கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து