முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
Putin 2022-05-14

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புதின் 69 வயதில் தந்தையாக போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் அவரின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரது 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. போரானது 90 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையில் புதினின் ரகசிய காதலியான அலினா கபேவா (38) கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடின்-அலினா கபேவா ஆகியோருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் அலினா கபேவா கர்ப்பமாகி உள்ள செய்திகள் பரவுகின்றன. இதுபற்றி ரஷியாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த 69 வயதான புதின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!