முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: சோதனை குறித்து சிதம்பரம் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Chidambaram 2022-05-17

சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் நேற்று சி.பி.ஐ சோதனை நடத்தியது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. 

இந்த சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை முதல் சி.பி.ஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சி.பி.ஐ தரப்பில் காண்பிக்கப்பட்ட எஃப்ஐஆரில் எனது பெயர் இல்லை. இந்த சோதனை நடத்தப்படும் தருணம் சுவராஸ்யமானது" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!