முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணியில் ஆகாஷ் மத்வால்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      விளையாட்டு
Akash-Madwal 2022 05 17

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்விற்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து விலகினார். அவரது உடல்நிலை குறித்து உடல் தகுதி நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது.  

இதையடுத்து சூர்யகுமார் யாதவிற்கு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மும்பை அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  மும்பை அணியின் நெட் பந்துவீச்சாளராக இருந்து வந்த அவரை மும்பை அணி தற்போது ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.நடப்பு தொடரில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்டது. இருப்பினும் அந்த அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டோனியின் பாதையில் டெல்லி கேப்டன் ரிஷப்

பஞ்சாப் கிங்ஸ் அணியை தில்லி கேபிடல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுக்கு காரணமாக ரிஷப் பந்த் கூறும் பதில் தோனியின் பதிலைப் போலவே இருக்கிறது. “இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஒரு மேட்ச் வெற்றிப் பெருகிறோம் இன்னொன்று தோல்வியுறுகிறோம். ஏதோ ஒரு மாற்றம் அணிக்கு தேவைப்பட்டது. அது இப்போது கிடைத்து விட்டதாக தோன்றுகிறது. லிவிங்ஸ்டன் பந்து வீசும் வேகத்தை மாற்றிப் போட்டதால் அவருக்கு நிறைய விக்கெட் விழுந்தது. 

எங்களது ஒரே முடிவு ஆட்டதை இறுதி வரை கொண்டு போவதுதான். இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் ஆடுகளத்தைக் கணித்து அதற்கு ஏற்றார் போல் விளையாடுவோம். அடுத்த போட்டிக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது (பிருத்வி ஷா குறித்த கேள்விக்கு)” என ரிஷப் பந்த் வெற்றி குறித்து கூறினார். ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும் என்பது தோனியின் ஃபார்முலா. தற்போது குருவின் பாதையில் சிஷ்யனும் பயணித்து இருக்கிறார். 

காயத்தால் ஐ.பி.எல்-லில்  இருந்து விலகினார் ரகானே

ஐபிஎல் 15-வது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி  பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து