முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Saminathan 2022 05 18

Source: provided

சென்னை : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர்  தனது தலைமையுரையில், இந்த ஆண்டில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புகளையும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகளையும் விரைந்து செயல்படுத்தத் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், முன்னிலையுரையாற்றினார்.  முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில், கூடுதல் இயக்குநர்கள் அம்பலவாணன், பாண்டியன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து