முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு: 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
school-30-06-20212

Source: provided

சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. கொரோனா தொற்று 2 ஆண்டு பரவலுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் முழுமையாக இந்த ஆண்டு திருத்தப்படுகிறது. அதனால் இந்த பணி முழு வீச்சில் நடைபெறும்.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 வுக்கும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி.வுக்கும்., 10-ந்தேதி பிளஸ்-1க்கும் தேர்வுகள் தொடங்கியது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் 3 தேர்வுகள் மட்டுமே நடைபெற வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 4 தேர்வுகள் எழுத வேண்டும்.

இந்த மாதம் 31-ம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே தேர்வுகள் நடைபெற வேண்டும். அதனால் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதுவரையில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஒரு மாவட்டத்தில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு திருத்துவதற்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் மாற்றம் செய்யும் வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் கொண்டு செல்லப்படுகிறது. விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்படுகின்றன. தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.

கொரோனா தொற்று 2 ஆண்டு பரவலுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் முழுமையாக இந்த ஆண்டு திருத்தப்படுகிறது. அதனால் இந்த பணி முழு வீச்சில் நடைபெறும். 2 வாரத்தில் திருத்தி முடிக்கப்பட்டு ஜூன் இறுதியில் பொதுத்தேர்வு முடிவு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து