முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? - பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Kumanan 2022 05 18

Source: provided

புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் கூறியது: "தமிழக முதல்வர் இந்த விடுதலை விவகாரத்தில் தொடக்கம் முதலே அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதனடிப்படையில் முதல்வர் எடுத்த விடாமுயற்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இன்று (நேற்று) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ன் படி தமிழக அமைச்சரவை ஒரு முடிவெடுத்தது என்றால், அந்த முடிவு மாநிலத்தின் கவர்னருக்கு கட்டுப்பட்டதுதான். அமைச்சரவையின் முடிவு தனக்கு கட்டுப்படாதது என்று கவர்னர் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் மீது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கால தாமதம், தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருந்தது சட்ட விரோதமானது. எனவே, கவர்னர் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ன் படி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து