முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநிலத்தில் கனமழையால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு : மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
Assam-rain 2022-05-17

Source: provided

கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு  மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழையால் 26 மாவட்டங்களில் நான்கு  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார்  மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவம்  வரவழைக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர்  ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

ராணுவம்  மற்றும் அசாம் ரைபிள்கள் படைகள் கச்சார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  அறிக்கையின்படி, கச்சார் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 96,697 பேர்  மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,089 கிராமங்கள் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. 32,944.52 ஹெக்டேர் பயிர் நிலங்கள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களையும், 89 பொருட்கள்  விநியோக மையங்களையும் அமைத்துள்ளது. இதுவரை இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று  பேர் கச்சார் மாவட்டத்தில் மழையால் உயிரிழந்தனர். பிரம்மபுத்திரா நதியின்  நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.

பல கிராமங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. ஜதிங்கா-ஹ்ரங்கஜாவோ மற்றும் மஹூர்-ஃபிடிங்கில் ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. திமாஹாசாவ் மாவட்டத்தில் உள்ள நியூ ஹாஃப்லாங் ரயில் நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. அதன் கட்டுமானம் முழுமையாக சேதமடைந்துள்ளது அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து