முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது: இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
india-corona-2022-05-19

ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பாதிப்பு 1,569 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 1,829 ஆக அதிகரித்த நிலையில், நேற்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 596, டெல்லியில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு 307 ஆக உயர்ந்தது. அரியானாவில் 257, உத்தரபிரதேசத்தில் 139, கர்நாடகாவில் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மரணங்கள் அடங்கும்.

இதுதவிர நேற்று முன்தினம் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,303 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,582 பேர் நேற்று முன்தினம் அதன் பாதிப்பில் இருந்து மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,419 ஆக சரிந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!