முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோவுக்கு எதிரான போட்டி நான் ஆடிய மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
53

Source: provided

மும்பை:

லக்னோவுக்கு எதிரான போட்டி நான்  ஆடிய மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று என்று கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா தோல்வி...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த 66வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ முதலில் களமிறங்கியது. இதில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. 

மிகவும் பிடித்திருந்தது... 

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில், ‘‘நான் வருத்தப்படவில்லை. கிரிக்கெட்டில் நான் ஆடிய மிகச் சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று. எங்களது விளையாட்டுத் திறன் வெளிப்பட்ட விதம் அருமை. ரிங்கு கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகப்பெரிய இலக்கை நம்ப முடியாத வகையில் துரத்தி வந்து, கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி என்ற நிலையில் எதிர்பாராதவிதமாக ரிங்கு ஆட்டமிழந்து விட்டார். அதுதான் வருத்தம். இந்தப் போட்டியில் அவரால் வெற்றி கிடைக்கப் போகிறது. பெரிய ஹீரோவாக கொண்டாடப்பட போகிறார் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனாலும் அவர் ஆடியது அற்புதமான இன்னிங்ஸ். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்றார்.

குவின்டான் மகிழ்ச்சி...

ஆட்டநாயகனாக தேர்வான குவின்டான் டி காக்  கூறுகையில், ‘‘சதம் அடித்து, அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தேன் என்பதில்  மகிழ்ச்சிதான். ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடி, எனது சதத்தை  கொண்டாட விடாமல் செய்துவிட்டார்கள். கடைசி ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ், முதல் 4  பந்துகளில் 18 ரன்கள் கொடுத்தார். போட்டி கையை விட்டு நழுவி விட்டது  என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் 5வது பந்தில் அந்த அற்புதமான கேட்ச்,  திருப்புமுனையாக இருந்தது. கேட்ச்கள்தான் போட்டிகளுக்கு வெற்றிகளை தரும்  என்பது உண்மைதான்’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து