முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலக குத்துச்சண்டை: நிகத் ஜரீன் முன்னேற்றம்..!

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
19 Ram 58-1

Source: provided

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரையில் இந்த போட்டி நடைபெறுகிறது. 73 நாடுகளைச் சேர்ந்த 310 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 12 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் தான் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்தவர். அவரது அப்பா முகமது ஜமீல் அகமது தான் குத்துச்சண்டையை அறிமுகம் செய்துள்ளார். முதல் ஓராண்டு குத்துச்சண்டை விளையாட்டின் அடிப்படை பாடத்தை அப்பாவிடம் தான் கற்றுள்ளார். தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சிக்கு இணைந்துள்ளார். 15 வயதில் இதே துருக்கியில் ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். நிகத் ஜரீன் இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டின் ஜூடாமாஸ் ஜிட்பாங்கை எதிர்கொள்கிறார். 

குத்துச்சண்டை வீரருக்கு மாரடைப்பு:

போட்டியின்போதே உயிரிழந்தார்...!

தோல்வியே கண்டிராதா குத்துச்சண்டை வீரர் மூசா யாமக், போட்டியின்போது மாரடைப்பால் விழுந்து உயிரிழந்தார். ஜெர்மனியை சேர்ந்த 38 வயதான மூசா யாமக், மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகாந்தா வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டார்.  போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 3வது சுற்றுக்கு முன் மூசா யாமக் குத்துச் சண்டை வளையத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கே மருத்துவ குழு வந்து பார்த்தபோது அவருக்கு மாரடைப்பு என தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார்.

இந்த மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூசா யாமக் 8-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். மேலும் இவரது அனைத்து வெற்றிகளிலும் நாக்-அவுட் மூலம் பெற்றவை எந்த புகழும் இவருக்கு உள்ளது. யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

________________

கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜா 

வருத்தம் - வெளியான புதிய தகவல் 

கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால்தான் ஜடேஜா அதிருப்தியடைந்து எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திரா ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது ‘இன்சைடு ஸ்போர்ட்ஸ்’ வலைத்தள பக்கத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ஆம் ரவீந்திரா ஜடேஜா தற்போது மன வருத்தத்திலும், மிகுந்த மன வேதனையுடன்தான் இருக்கிறார்.

கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை, நிர்வாகம் இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம். ஆனால் அனைத்துமே வேகமாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்கள் ஜடேஜாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த வீரருக்கு நடந்திருந்தாலும், மன வலியைத்தான் தந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!