முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலை பயிற்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட்டிங் பயிற்சி : வெற்றிக்கு பிறகு விராட் கோலி உருக்கம்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
Virat-Kohli 2022-05-20

Source: provided

மும்பை : வலை பயிற்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட்டிங் பயிற்சி செய்தேன் என்று குஜராத்திற்கு எதிரான வெற்றிக்கு பிறகு விராட் கோலி தெரிவித்தார். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

முக்கியமான போட்டி...

ஆட்ட நாயகன் விருதை வாங்கிய பின் கோலி மிகவும் உருக்கமாக பேசினார். ஹர்ஷா போக்லே எழுப்பிய பல கேள்விகளுக்கு கோலி பதில் அளிக்கையில், " இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி. எனது அணிக்காக நான் அதிகம் பங்களிப்பு செய்யவில்லை என்று நான் ஏமாற்றமடைந்து இருந்தேன். என்னுடைய தனிப்பட்ட சாதனைகளை விட அணிக்கு பங்களிக்காமல் இருந்தது தான் என்னை வருத்தியது. 

எதிர்பார்ப்புகள் அதிகம்...

எனது ஆட்டம் எங்கள் அணிக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆட்டமாக இருந்தது. இது எங்களை நல்ல நிலையில் கொண்டு சென்று நிறுத்தும். அணிக்கு நல்ல ஆட்டங்களை ஆடியிருப்பதால் என் மீது எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கவே செய்யும். எனவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் வலை பயிற்சியின் போது 90 நிமிடங்கள் இடைவிடாமல் பேட் செய்தேன். அது எனக்கு பெரிதும் உதவியது." என கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து