முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு 7 ஆயிரம் ரன்கள் குவித்து கோலி புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
Virat-Kohli-1 2022-05-20

Source: provided

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு 7 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். பெங்களூரு அணிக்காக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

வெற்றி கட்டாயத்தில்...

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. 

7 ஆயிரம் ரன்கள்...

இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். இதனால் விராட் கோலி ஒரு அணிக்காக 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். பெங்களூரு அணிக்காக 7 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து