முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசம், இலங்கை முதல் டெஸ்ட் டிராவானது

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
Bangladesh-Sri-Lanka 2022-0

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமீம் இக்பால் சதமடித்து 133 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 68 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி 2வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், 5ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது ஏஞ்சலோ மேத்யூசுக்கு அளிக்கப்பட்டது.  இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.

சர்ச்சைகுரிய முறையில் அவுட்: மேத்யூ வேட் கடும் விரக்தி...!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் வீரர் மேத்யூ வேட் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வீசிய 6-வது ஓவரின் போது மேத்யூ வேட்-க்கு எல்பிடபியூ முறையில் கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் பந்து தனது மட்டையில் உரசியதாக செய்கை செய்த வேட் உடனடியாக டிஆர்எஸ் கோரினார். 

அப்போது பந்து தெளிவாக மட்டையில் பட்டு திசை மாறி கீழே செல்வது தெரிந்தது. இருப்பினும் "அல்ட்ரா - எட்ஜ் "-யில் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இதனால் 3-வது நடுவர் அவுட் வழங்க அது சர்ச்சையான முடிவாக மாறியது. இதனால் கடும் விரக்தியில் வெளியேறிய வேட் ஓய்வறைக்கு சென்ற பின் தனது ஹெல்மெட்டை கோபத்தில் தூங்கி எறிந்தார். பின்னர் ஆத்திரத்தில் தனது மட்டையை ஓங்கி அவர் கீழே வீசுவது போன்று செய்தார், இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய ஜூனியர் ஹாக்கி: தமிழக அணி படுதோல்வி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தில், கடந்த 17ஆம் தேதி முதல் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4வது நாளான நேற்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதின. 

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜார்க்கண்ட் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றினார். ஆட்டத்தின் இறுதியில் 7 - 1 என்ற கோல்கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது. தமிழக அணி வெற்றி பெறும் என்ற உற்சாகத்தில் இருந்த உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

தென் கொரியாவின் குவாங்ஜூ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோமலிகா கூறும்போது, “பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த ஆட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் மூலம் சீன தைபேவுக்கு எதிராக தொடக்கத்திலேயே முன்னிலை பெற முடிவு செய்திருந்தோம். அதன்படியே போட்டியும் அமைந்தது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!