முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் சேர்த்த ரஷ்யா

சனிக்கிழமை, 21 மே 2022      உலகம்
Gary-Gasparov 2022-05-21

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. 

இதற்கிடையே ரஷ்யாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

இதையடுத்து ரஷ்ய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, வெளிநாட்டு உளவாளிகள் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மற்றும் மனித உரிமைகள் அறக்கட்டளைகள் மூலம் அவர்களுக்கு நிதி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள கேரி கேஸ்பரோவ் கூறியிருப்பதாவது, 

ரஷ்யாவின் நீதித்துறை அமைச்சகம் என்பது புடினின் தலைமையில் முரண்பாடான துறையாக இருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் புடின் அவரது நண்பர்களுடன் உளவு வேலை பார்த்து கொண்டிருந்த போதும், புனித பீட்டர்பெர்க்கில் உள்ள மக்களிடம் இருந்து திருடிக் கொண்டிருந்த போதும் நான் எனது நாட்டின் பிரதிநிதியாக இருந்தேன். புடினுக்கு எதிராக செயல்படுவதே ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகும் என்று கேரி கேஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!